Thursday 2 October 2014

புத்தகம்

நேற்று நண்பனின் புத்தக கடையில் அமர்ந்து இருந்தேன். அப்போது ஒரு கணவனும், மனைவியும் அவர்களின் சிறு பெண்ணோடு வந்தார்கள். அந்த கணவர் தன் மகளோடு சேர்ந்து 6 புத்தகங்களை தேர்வு செய்தார். பில் எழுதும் சமயத்தில் அந்த மனைவி திட்டியதால் அவர் தேர்வு செய்த 4 புத்தகங்களை வேறு வழியின்றி வேண்டாம் என்று கூறி விட்டு 2 புத்தகங்கள் மட்டுமே வாங்கினார்.
அவர்களுக்குள் நடந்த உரையாடல் சற்று சுருக்கமாக,
மனைவி "புத்தகம் வாங்குறதெல்லாம் எதுக்கு?"
கணவன்  "தேவைப்படுது வாங்குறேன்"
  மனைவி "தண்ட செலவு"
கணவன் "நீ இப்ப தீபாவளிக்கு 20000 ரூபாய்க்கு சேலை வாங்கிருக்க. நான் ஏதாவது சொன்னேனா?" 
மனைவி "கதை படிக்கிறது முக்கியமாக்கும்" 
கணவன் "சினிமாலயும் கதை தானே சொல்றாங்க. அதை மட்டும் ஏன் பாக்குற?" 

The argument continued like "coffee"   "toffee"
கடைசியில் அந்த கணவர் வாங்கிய 2 புத்தகங்களின் மொத்த மதிப்பு 200 ரூபாய் மட்டுமே.
20000 : 200
ஆணாதிக்க சண்முகம் என்று கூவும் பெண்களெல்லாம் வாங்க. நல்ல தீர்ப்பு சொல்லுங்க.

No comments:

Post a Comment