Friday, 31 October 2014

பொறாமை

ஒவ்வொரு மனிதனும் சக மனிதனுக்கும் கிடைக்கும் ஒவ்வொரு விசயத்தை பார்த்தும் பொறாமைப்படுகிறான்.
ஆனால் எல்லா மனிதர்களும் சக மனிதனுக்கு கிடைப்பதை பார்த்து பொறாமைப்படாத விசயங்கள்
1) நரை
2) வியாதி
3) மரணம்

பெண்ணடிமைத்தனம்

பெண்ணடிமைத்தனத்தை முதலில் உருவாக்கியவன் பெருமாள் தான்.
இதற்கு சாட்சி பல கோவில்களில் இன்னும் இருக்கிறது. பெருமாள் படுத்திருக்கும் நிலையில் லெட்சுமி,  பெருமாளுக்கு கால் பிடித்து விடுவது போல் இருக்கும் ஓவியங்கள் தான்.

பரட்டை பத்தவச்சிட்டியே பரட்டை.

Thursday, 30 October 2014

காமம்

கடவுள்கள் காமத்தை ஒதுக்கியவர்கள், காம உறவில் ஈடுபடமாட்டார்கள் என்றால், அப்புறம் என்ன மசுருக்கு சிவன், பெருமாள், முருகன்,  ஐயனார் போன்ற பரதேசிகளுக்கு 2 பொண்டாட்டிகள்?
சிவராஜ் சித்த வைத்தியசாலை வைத்தியர் போல தான் கேள்வி கேட்க வேண்டும்.
ஏன்டா 2 பொண்ணுங்க வாழ்க்கையோடு விளையாடுறீங்க?

Sunday, 26 October 2014

தீபாவளி

நான் சென்ற வருடத்தை போல இந்த வருடமும் தீபாவளியை கொண்டாடவில்லை.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கவில்லை.
புத்தாடை அணியவில்லை.
பட்டாசு வாங்கவில்லை.
நரகாசுரன் கொல்லப்பட்டதை நான் ஏன் கொண்டாட வேண்டும்?
எனக்கும் நரகாசுரனுக்கும் தீராத பகையா?

Saturday, 25 October 2014

நான்

நான் நாத்திகன் அல்ல. கடவுள் மீதான என் கோபத்தை தான் என் பதிவுகளில் வெளிப்படுத்துகிறேன்.

Monday, 20 October 2014

புண்ணியம்

பட்டாசுகள் வாங்குவதற்காக செலவழிக்கும் பணத்தை, சாப்பாட்டுக்கு வழியின்றி கஷ்டப்படுபவர்களுக்கு உணவளிக்க செலவழித்தால் புண்ணியம் கிடைக்கும்.

Sunday, 19 October 2014

இப்படியும் நடந்திருக்கலாம்.

ராமன் ஏக பத்தினி விரதன் தான். ஆனால் லக்ஷ்மணன் ஏக பத்தினி விரதன் அல்ல. மனைவியை விட்டு பிரிந்து வந்தவன். சூர்ப்பனகையிடம் தவறாக நடக்க முயற்ச்சித்து இருக்கலாம். இதனால் ராவணன் சீதையை கடத்தி இருக்கலாம்.

கிருஷ்ணன் பொம்பளை பொறுக்கி என்பது உலகறிந்த விஷயம். கிருஷ்ணன், நரகாசூரனின் காதலியை படுக்க அழைத்து இருக்கலாம். இதனால் நடந்த யுத்தத்தில் கிருஷ்ணன் நரகாசூரனை கொன்றிருக்கலாம்.

mission to mars

ask.fm என்ற ஒரு appஇல் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் என்ன கொண்டு செல்வீர்கள் என்று கேட்கிறார்கள்.
செவ்வாய் கிரகத்திற்கு நான் ஏன் செல்ல வேண்டும்? செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் சென்று அங்கே என்ன புடுங்க போகிறார்கள்? சாப்பிட போகிறார்கள். தூங்க போகிறார்கள். உடலுறவு வைத்துக்கொள்ள போகிறார்கள். பிளாஸ்டிக் குப்பைகளை போட போகிறார்கள். ரசாயன கழிவுகளை போட போகிறார்கள். பிறகு வேறு ஒரு கிரகம் தேடி அலைய போகிறார்கள். இதை தவிர மனிதர்களுக்கு வேறு ஒன்றும் புடுங்க தெரியாது.

உலகம் முழுவதிலும் இருக்கும் முட்டாள் விஞ்ஞானிகள் மக்களின் பணத்தை கோடி கோடியாக செலவழித்து சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக செய்யும் செலவை வைத்து உலகம் முழுவதிலும் ஏழைகளே இல்லாமல் செய்து விடலாம்.

mission to mars.

my answer is
BLOODY FUCK.

Friday, 17 October 2014

சாணி பவுடர்

கரூர் பகுதியில் வீடு, கடை, அலுவலகம் இவற்றில் வாசல் தெளிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் வர்ணம், பச்சை வர்ணம் கலந்து பார்ப்பதற்கு மாட்டு சாணம் தெளித்தது போன்ற மாய தோற்றத்தை தருகிறது. உண்மையில் மாட்டு சாணத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது விஷத்தன்மை கொண்ட ரசாயன பொருள். கரூர் பகுதியில் தற்கொலைக்கு முயல்பவர்கள் இதை சாப்பிடுவதாகவும் சொல்கிறார்கள்.
தற்போது மதுரையிலும் இதை சில வீடுகளில் வாசல் தெளிக்க பயன்படுத்துகிறார்கள்.

Tuesday, 14 October 2014

எங்கே ஆணாதிக்கம்?

ஆணாதிக்க சண்முகம் என்று பல பெண்களும், சில ஆண்களும் கூவிகிட்டு திரியிறாய்ங்கே.
முதியோர் இல்லத்தில் இருக்கும் எல்லா தாத்தா, பாட்டியையும் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பதில் ஒன்று தான். "என் மகன் நல்லவன் தான். வந்த மருமக சரியில்லை" என்று.  இதை பெண்ணாதிக்கம் என்று சொல்லலாமா? பெண்ஈயவாதிகளே!

Sunday, 12 October 2014

Say no

Say no to crackers. Save the peaceful world.

பட்டாசுகள் வாங்க போகிறீர்களா?

யுத்தங்களில் மக்களை கொல்வதற்காக தயாரிக்கப்படும் வெடி மருந்து பொருட்களில் இருந்து தான் பட்டாசுகளும் தயாரிக்கப்படுகின்றன. வெளிப்புற வடிவங்கள் வேறுதானே தவிர உள்ளே இருக்கும் சரக்கு ஒன்று தான்.
நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள். நீங்கள் வெடிகுண்டு வாங்கத் தான் போகிறீர்களா?

ஹோமம், யாகம்

ஹோமம், யாகம் இந்த இரண்டு காரணங்களுக்காகவும் இந்தியா முழுவதும் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு, அழிக்கப்படுகின்றன.

பெண்களை ரசிக்கும் உரிமை

பெண்கள் குளிப்பதை பார்த்து ரசிக்கும் உரிமை பிள்ளையாருக்கும் இவன் தாய்மாமன் கிருஷ்ணனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
இதைப் பற்றி கேட்டால் பிள்ளையாருக்கு அவன் ஆத்தா பார்வதி போலவே பெண் வேண்டும் என்பதற்காக குளத்தங்கரையில்  குந்தியிருப்பதாக சொல்கிறார்கள்.
பெண்ணை பார்ப்பதற்கு வேறு இடமே இல்லையா? காய்கறி வாங்க செல்லும் போது காய்கறி கடை அல்லது சந்தைக்கு அருகில் குந்திகினு லுக் விடலாம். விவசாய வேலைக்கு செல்லும் போது பாதை ஓரத்தில் குந்திக்கலாம். இதையெல்லாம் வுட்டுபோட்டு குளிக்கும் போது தான் பாக்கணுமோ?
படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மனிடம் சொல்லியிருந்தா அவன் பிள்ளையாரின் விருப்பத்திற்கு ஏற்ப பெண்ணை படைத்திருப்பானே?

Wednesday, 8 October 2014

ஆடை

வெப்பமான நிலப்பரப்பில் வசிப்பவர்களிடம் கோட், ஷூ அணிந்து தான் வேலைக்கு வரவேண்டும் என்று உத்தரவிடுவதும், குளிர்பிரதேசம் அல்லது பனிபிரதேசத்தில் வசிப்பவர்களிடம் கதர் சட்டை, கதர் வேட்டி அணிந்து தான் வேலை பார்க்க வேண்டும் என்று சொல்வதும் ஒன்று தான்.
இரண்டாவது தகவல் நடப்பதாக தெரியவில்லை. ஆனால் முதல் தகவல் இந்தியாவில் நடக்கிறது.

ஜாதீ

நேற்று நான் விற்கும் தேன் விற்பனைக்காக வீடு வீடாக சென்று பிட் நோட்டீஸ் போட சென்றேன்.
ஒரு வயதான மனிதர் தேனை பற்றி விசாரித்தார். அப்படியே என் ஜாதீ என்னவென்றார்?
பிச்சை எடுக்கும் நான் என்ன ஜாதீயா இருந்தா உனக்கென்ன? பிச்சை போடும் நீ என்ன ஜாதீயா இருந்தா எனக்கென்ன?
சென்னையில் வசித்த போது அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியின்றி கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு உணவளித்த பலர் என்ன ஜாதீ என்று எனக்கு தெரியாது.
என் ஜாதீக்காரனால் விவசாயம் செய்யப்பட்டு, என் ஜாதீக்காரனால்
வாகனத்தில் என் ஊருக்கு கொண்டு வரப்பட்டு, என் ஜாதீக்காரனால் packing  செய்யப்பட்டு, என் ஜாதீக்காரனால் விற்கப்பட்டு, என் வீட்டில் சமைத்தால் தான் அல்லது என் ஜாதீக்காரனின் ஹோட்டலில் தான் நான் சாப்பிடுவேன் என்று நினைத்தால் நான் எந்த உணவையும் சாப்பிட முடியாது.
என் ஜாதீக்காரனால் விளைவிக்கப்பட்ட பருத்தியை கொண்டு, என் ஜாதீக்காரனால் துணியாக உருவாக்கப்பட்டு, என் ஜாதீக்காரனால் தைக்கப்பட்டு, என் ஜாதீக்காரன் கடையில் வாங்கி
அணிய வேண்டும் என்று நான் நினைத்தால் என் ஆயுள் முழுவதும் நிர்வாணமாகத் தான் நான் இருக்க வேண்டும்.
என் ஜாதீக்காரனால் உருவாக்கப்பட்ட பொருட்களை கொண்டு, என் ஜாதீக்காரனால் கட்டப்பட்ட வீட்டில் தான் நான் குடியிருப்பேன் என்று நினைத்தால் தெருவில் தான் குடும்பம் நடத்த முடியும்.

Sunday, 5 October 2014

கருவறை

இந்தியாவில் கோவில் கருவறை கட்டப்பட்டதன் ஆரம்ப கால நோக்கம் என்னவெனில் கோவில் பூசாரி வெயில் படாமல் இருக்கவும், மழையில் நனையாமல் இருக்கவும் தான்.

ஓம்

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தங்களின் பெயரில் கொண்ட மனிதர்களுக்கு அளவுக்கு அதிகமான துன்பங்கள் நேரும்.
எந்த ஒரு மனிதரின் பெயரிலும் ஓம் என்ற வார்த்தை இடம் பெறக்கூடாது.

Saturday, 4 October 2014

இளநீர் குருத்து

இளநீர் சாப்பிடும் யாருமே அதில் இருக்கும் குருத்தை சாப்பிடுவதே இல்லை.
இளநீர் சாப்பிட்ட பிறகு அதில் இருக்கும் மெல்லிய ஓடு பகுதி தான் குருத்து ஆகும். தேங்காய் உருவான பின் இந்த மெல்லிய குருத்தானது கடினமான ஓடாக மாறுகிறது.
இளநீர் சாப்பிட்ட பின் இளநீர் வெட்டுபவரிடம் குருத்தை நறுக்கி கொடுங்கள் என்றால் அவரே குருத்தை நறுக்கி கொடுப்பார்.
இந்த குருத்தானது வயிற்று புண்,  சர்க்கரை வியாதி இவற்றுக்கு அருமருந்து.

Pyramid

பிரமிட் பூமியில் இருக்கும் சக்தியை உறிஞ்சுவதோடு மட்டுமல்லாது பூமியில் அளவுக்கு அதிகமான வெப்பத்தை இறக்குகிறது. பூமி பாலைவனமாக மாற இந்நிகழ்வும் ஒரு காரணமாக அமைகிறது.

Thursday, 2 October 2014

புத்தகம்

நேற்று நண்பனின் புத்தக கடையில் அமர்ந்து இருந்தேன். அப்போது ஒரு கணவனும், மனைவியும் அவர்களின் சிறு பெண்ணோடு வந்தார்கள். அந்த கணவர் தன் மகளோடு சேர்ந்து 6 புத்தகங்களை தேர்வு செய்தார். பில் எழுதும் சமயத்தில் அந்த மனைவி திட்டியதால் அவர் தேர்வு செய்த 4 புத்தகங்களை வேறு வழியின்றி வேண்டாம் என்று கூறி விட்டு 2 புத்தகங்கள் மட்டுமே வாங்கினார்.
அவர்களுக்குள் நடந்த உரையாடல் சற்று சுருக்கமாக,
மனைவி "புத்தகம் வாங்குறதெல்லாம் எதுக்கு?"
கணவன்  "தேவைப்படுது வாங்குறேன்"
  மனைவி "தண்ட செலவு"
கணவன் "நீ இப்ப தீபாவளிக்கு 20000 ரூபாய்க்கு சேலை வாங்கிருக்க. நான் ஏதாவது சொன்னேனா?" 
மனைவி "கதை படிக்கிறது முக்கியமாக்கும்" 
கணவன் "சினிமாலயும் கதை தானே சொல்றாங்க. அதை மட்டும் ஏன் பாக்குற?" 

The argument continued like "coffee"   "toffee"
கடைசியில் அந்த கணவர் வாங்கிய 2 புத்தகங்களின் மொத்த மதிப்பு 200 ரூபாய் மட்டுமே.
20000 : 200
ஆணாதிக்க சண்முகம் என்று கூவும் பெண்களெல்லாம் வாங்க. நல்ல தீர்ப்பு சொல்லுங்க.

Bike horn

கொழுந்தியாளை பின்னாடி உக்கார வச்சுக்கிட்டு பைக் ஓட்டும் போது பைக் ஹாரன் அடிச்சுக்கிட்டேதான் வண்டி ஓட்டுவாய்ங்க போல.
நானும் ஒரு நாள் ஹாரன் அடிச்சுக்கிட்டே பைக் ஓட்டுவேன்டா!