Thursday 29 May 2014

மகாபாரதம்.

மகாபாரதம் என்ற காவியத்தை எல்லோருமே மதிக்கிறார்கள். அனால் அதில் சில கேவலமான நாகரீகங்கள் பின்பற்றப்பட்டிருக்கின்றன.

ஒரு பெண்ணை 5 ஆண்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஒரு கேவலமான நாகரீகம் இருக்கிறது. இதை படிக்கும் உங்களுக்கு என் மீது கண்டிப்பாக கோபம் வரும். உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்கள் குடும்பத்தில் யாராவது ஒரு பெண்ணை 5 ஆண்கள் திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பீர்களா? 5 ஆண்களை திருமணம் செய்து கொள்ள பாஞ்சாலி எப்படி சம்மதிக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதை சிலர் வேறு விதமாக பூசி மெழுகுகிறார்கள். பாஞ்சாலியை மனம் என்றும், பஞ்சபாண்டவர்கள் என்பது 5 புலன்கள் என்றும் சொல்கிறார்கள். அப்படி என்றால் 100 கெளரவர்கள்  யார்?

திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றெடுக்கிறாள் குந்தி. கர்ணன் பிறக்கிறான். உங்கள் குடும்பத்தில் யாராவது திருமணத்திற்கு முன்பே வேறு ஒருவனோடு சேர்ந்து குழந்தை பெற்றெடுப்பதை காவியம் என்று புகழ்வீர்களா?

தற்போது மகாபாரதம் என்று ஒரு மொக்கையான (மதுரை பேச்சு வழக்கில் பெரிய அளவு என்று அர்த்தம்.) ஒரு புத்தகம் விற்கிறார்கள். இது கிட்ட தட்ட 2000 பக்கங்கள் இருக்கலாம். அதில் 1000 பக்கங்கள் அசைவம் சாப்பிட கூடாது என்பதை மட்டுமே சொல்கிறார்கள்.

கீதை உபதேசம் என்ன கண்ணன் 1000 பக்கங்கள் பிரிண்ட் பண்ணும் அளவுக்கா கண்ணன் சொல்கிறான்? அல்லது 30 tv episode போடும் அளவுக்கு சொல்கிறானா? யுத்த களத்தில் யுத்தம் ஆரம்பிப்பதற்கான சங்கை ஊதி விட்டால், உடனே எதிராளியை கொல்ல வேண்டும். அதுவே போர் என்பது.

அர்ஜுனன் வில்லை கீழே போட்ட பிறகு கண்ணன் அவனுக்கு உபதேசிக்கிறான். கண்ணன் 30 tv episode அளவுக்கு உபதேசிக்கிறான் என்ற காரணத்திற்காகவோ, அவன் சொல்வதை எல்லாம் 1000 பக்கங்கள் print பண்ண வேண்டும் என்ற காரணத்திற்காகவோ கெளரவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பார்களா?

கண்ணன் 30 tv episode  அளவுக்கு உபதேசம் செய்தபிறகு போரை நடத்தலாம் என்று கெளரவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பார்களா?

No comments:

Post a Comment