Idea network சரியில்லை என்ற காரணத்தால் வேறு நெட்வொர்க்குக்கு மாறிட்டேன். காரைக்குடி, தேனி போன்ற ஊர்களில் ரோமிங்ல வருது.
2 வருடங்களுக்கு முன்பு ஐடியா சிம் புதிதாக வாங்கிய போது மதுரையை தாண்டி எந்த ஊருக்கு சென்றாலும் ரோமிங் தான்.
வெளியூர் செல்லும் போது பயணகாலத்திலும் நெட்வொர்க் சரியில்லை.
கஸ்டமர் கேருக்கு எப்ப போன் பண்ணாலும் புதுசா 600 டவர் வச்சிக்கிட்டே இருக்கோம்ன்றானுங்க. 2 வருசமா இதே தான் சொல்றானுங்க.
Sunday, 29 March 2015
Idea network
Saturday, 28 March 2015
தண்ணீர் பிரச்சனை
குளம், ஏரி, கண்மாய் மற்றும் எல்லா நீர் சேமிப்பு வசதிகளையும் மூடி பிளாட் போட்டு வித்துட்டு பக்கத்து மாநிலத்தான் தண்ணீர் விட மாட்டேன்கிறான் என்று கத்துவது வீண் செயல்.
Friday, 27 March 2015
சின்ன விசயம்
சாதாரண சிறிய விசயத்தை செய்வதற்கு கூட அதிகமாக கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.
எனக்கு மட்டும் ஏண்டா ஆண்டவா இப்படி?
Tuesday, 24 March 2015
கீழ மாசி வீதி
மதுரை கீழமாசி வீதியில் 2 தேர்கள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த தேருக்கு அருகில் தான் மறைவான இருண்ட பகுதியில் பாலியல் தொழில் வெகு விமரிசையாக நடந்ததாக பலர் சொல்கிறார்கள்.
அந்த தேரை தான் எல்லோரும் இப்போது கும்பிடுறாய்ங்கே!
Wednesday, 18 March 2015
கண்ணாடி
கண்ணாடிக்கு ஈர்ப்பு சக்தியும், பிரதிபலிக்கும் சக்தியும் உண்டு.
எந்த இடத்தில் எந்த திசையை நோக்கி வைக்கிறோமோ அதற்கேற்ப பலன்கள் மாறும்.
Monday, 16 March 2015
கோவில் யானை
காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிந்த யானையை பிடித்து கோவில்களில் கட்டிப் போட்டு அதன் ஆயுள் முழுவதும் இல்லற வாழ்க்கையில் ஈடுபட விடாமல் செய்து இறந்த பிறகு அதன் புகைப்படத்தை பத்திரிகையில் போடுவதுடன் அதன் வாழ்க்கை முடிந்து விடுகிறது. கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட நாள் முதல் மரணம் வரை அதன் குடும்பத்தை பிரிந்து அது அழுது கொண்டே தான் இருக்கும்.
Friday, 6 March 2015
எதிர்மறை எண்ணங்கள் (negative thoughts)
அல்லது இந்த பொருட்களை எந்த இடத்தில் வைப்பது என்று சரியாக தெரிந்துகொண்டு வைக்கவேண்டும்.
Monday, 2 March 2015
டைரடக்கர்கள் கவனத்திற்கு
ஆத்தா நான் பாஸாகிட்டேன்
வெற்றி வெற்றி வெற்றி
உங்க பையன் ஜாதகம் அமோகமா இருக்கு. இனிமே எல்லா காரியத்திலும் அவனுக்கு வெற்றி தான்
இது போன்ற வசனங்களை படத்தின் முதல் வசனமாக வைத்தால் படம் வெற்றி பெற்று விடுமா?
கோவில் கோபுரம், சாமி படம், சாமி சிலை இவற்றை படத்தின் முதல் காட்சியாக வைத்தால் படம் வெற்றி பெற்று விடுமா?
கோவில் மணி ஒலிக்கும் சப்தத்தை முதல் சப்தமாக படத்தில் வைத்தால் படம் வசூலை வாரி குவிக்குமா?
இதை எதையுமே செய்யாத ஹாலிவுட் படங்கள் உலக அளவில் வெற்றி பெறுகின்றன.
இதை எல்லாம் செய்யும் பல தமிழ் படங்கள் 30 நாட்களுக்குள் பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன.
டைரடக்கர்கள் யோசிப்பார்களா?