Sunday, 11 December 2016

தூக்கம்

முந்தைய பதிவின் தவறை திருத்தி இருக்கிறேன்.
கிழக்கில் தலை வைத்து படுப்பது எதிர்மறை சக்தியை வெளியேற்றுகிறது. ஆனால் அன்றாட மகிழ்ச்சியை கிடைக்க விடாமல் செய்து விடுகிறது.
எனவே மேற்கு, தெற்கில் தலை வைத்து படுப்பதே சரியானது.

Sunday, 27 November 2016

கிழக்கு

கிழக்கில் தலை வைத்து படுப்பவர்கள் ஆபரணங்கள் எதுவும் அணிந்திருக்க கூடாது என்பது என் கருத்து.
ஆபரணங்கள் அணிந்தால் ஏதாவது துன்பம் நிகழ்வதாக கருதுகிறேன்.

மோதிரம்

என்னுடைய முந்தைய பதிவின் தவறுகளை திருத்தி இருக்கிறேன்.
வலது கையில் மோதிரம் அணிவது நேர்மறை சக்தி தரும்.
இடது கையில் மோதிரம் அணிவது எதிர்மறை சக்தி தரும்.

Tuesday, 1 September 2015

my new blog

இன்று முதல் எனது புதிய blog id
www.pathillai.blogspot.in

Saturday, 29 August 2015

மோதிரம்

சில காரணங்களால் மோதிரத்தை பற்றிய என்னுடைய பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டேன். சில ஆய்வுகளுக்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன். 

Sunday, 23 August 2015

கோவில்கள், நவ கிரகங்கள்

எல்லா குலதெய்வ கோவில்களும் பெரும்பாலும் நேர்கோட்டு வடிவம் அல்லது  ட வடிவத்திலேயே இருக்கின்றன. எந்த குலதெய்வ கோவில்களிலும் நவகிரக வழிபாடே கிடையாது.
மற்ற கோவில்கள் ஓ என்ற (ஓம் அல்ல) வடிவில் கட்டப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற வடிவில் கட்டப்பட்ட கோவில்கள் எதுவுமே குலதெய்வ கோவில்கள் அல்ல. மேலும் இவற்றில் நவகிரக வழிபாடு இருக்கிறது.
குலதெய்வ கோவில்கள் தான் ஓ வடிவ கோவில்களுக்கும் முந்தைய காலத்தில் கட்டப்பட்டு இருக்க வேண்டும்.
நவகிரக வழிபாடு என்பது சரியா? என்பதையும் யோசிக்கிறேன். என் வாழ்க்கையில் 18 வருடங்களுக்கு முன் நவகிரக கோவில்களுக்கு சென்று வழிபட ஆரம்பித்த பின்னர் தான் அதிகமான, சமாளிக்க முடியாத கஷ்டங்கள் உண்டானது.
முதன்முதலில் சூரியன் கோவிலுக்கு தான் சென்றேன். பிறகு எல்லா கிரக கோவில்களுக்கும் சென்று வழிபட்டிருக்கிறேன்.

நான் பாடும் பாடல்

Sunday, 16 August 2015

ஜோதிட ஆராய்ச்சி

இன்றைய காலத்தில் பலர் ஜோதிட ஆராய்ச்சி என்ற பெயரில், ஜோசியம் போன்ற விசயங்களின் மீதுள்ள ஈர்ப்பால், இலவசமாக ஜாதகம் கணிக்க கற்று தருகிறோம், குறைந்த கட்டணத்தில் ஜாதகம் கணிக்க கற்று தருகிறோம் என்ற வாக்குறுதிகளை நம்பி, ஜாதகம் கணிக்கும் முயற்சியில், பயிற்சியில்  ஈடுபடுகிறார்கள்.
ஆனால் எனக்கு தெரிந்தவரை 99.99% ஜோசியர்கள், சராசரி மனிதர்களுக்கு கிடைக்ககூடிய சந்தோசங்களை பெறாமல் கஷ்டப்படுகிறார்கள்.
ஜாதகம் கணிப்பவர்கள், பரிகாரம் செய்து கொடுப்பவர்கள், குறி சொல்பவர்கள் எல்லோருடைய நிலையும் இதுதான். 
இதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை.
பொய் சொல்லி ஏமாற்றுபவர்கள் மட்டுமே பணக்காரர்களாக இருக்கிறார்கள்.
மீதம் இருக்கும் பணக்கார ஜோசியர்களும் எத்தனை நாட்கள் அந்த வசதியை அனுபவிப்பார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. அவர்கள் எத்தனை நாட்கள் சந்தோசமாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.